லக்னோ:
வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி உத்திரபிரதேச கிழக்கு பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் பிரியங்கா காந்தி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில், பிரியங்கா காந்தி அலகாபாத் தொகுதியில் போட்டியிட வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி என்ன சொல்கிறாரோ அதனை செய்வேன் என பிரியங்கா சுகந்தி காந்தி கூறி வருகிறார்.
பல்வேறு யூகங்கள் எழுந்தாலும், வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து வேட்பாளராக பிரியங்கா காந்தி நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.