சென்னை:

கோடை விடுமுறையை சென்னை மாநகர மக்கள் ஓய்விடங்களுக்கு சென்று பொழுதுபோக்கும் வகையில், 100 சிறப்பு பேருந்துகளை இயக்குப்படுவதாக  சென்னை மாநகர போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் வசதிக்காக 19-4-2019 முதல் 30-06-2019 வரை அனைத்து சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாளத்தலங்கள் மற்றும் திருத்தலங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்புபேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக சென்னையின் முக்கிய இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என  மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.