சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், 240 4மாற்றுத் திறனாளிகள் , 34 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர்கள் தேர்வு கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இந்த நிலையில், இன்று தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இவர்களில் தேர்வெழுதிய 2697 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2404 பேர் தேர்ச்சி அடைந்து இருப்பதாகவும், அதுபோல தேர்வு எழுதிய 45 கைதிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel