எப்பவுமே விஷேசங்கள்ல கற்கண்டுக்கு தனி இடம் உண்டு. இன்றைய தமிழ் புத்தாண்டு திருநாளில் ருசியான கற்கண்டு பொங்கல் திருமதி சோனியா அவர்களின் செய்முறையில் செய்து பார்ப்போமே

ருசியான கற்கண்டு பொங்கல்

தேவையானவை :

பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – ஒரு பிடி
கற்கண்டு – 1 /2 கப்
முந்திரி திராட்சை – தேவையான அளவு
குங்கும பூ – ஒரு ஸ்பூன்
பால் – அரை லிட்டர்
ஏலக்காய் போடி – சிறிதளவு

செய்முறை :

பச்சரிசி பயத்தம் பருப்பு லேசாக சூடு செய்து பின் கழுவி 3 கப் தண்ணீர் விட்டு ப்ரெஷர் குக்கரில் மூன்று விசில் விடவும் .

அதே நேரத்தில் கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்சவும் . கொஞ்சம் திக் ஆனதும் கற்கண்டு ஏலக்காய் சேர்க்கவும்

காய்ந்து கொண்டிருக்கும் பாலில் அரிசி பருப்பு சற்று குழைய வைத்து சேர்க்கவும் . பின் பாலில் ஊறவைத்த குங்குமப்பூவை சேர்க்கவும். பின் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும் .

செமிசாலிட்டா இருக்கும் போதே ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரம் சேர்த்து இறக்கவும் .

சுவையான கற்கண்டு பொங்கல் ரெடி