அமராவதி:
ஆந்திர மாநிலத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஆனது. இதன் காரணமாக பொதுமக்கள் வெகுநேரம் காத்திருந்து விட்டு திரும்பி சென்றனர்.
இந்த நிலையில், வாக்கு இயந்திரம் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்- சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தி அவசர கடிதம் எழுதி உள்ளார்.
[youtube-feed feed=1]