நாடு முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. 91 லோக் சபா தொகுதிகள் உள்பட ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா உள்பட 4 மாநில சட்டப் பேரவைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரப்படி மேடக் தொகுதியில் அதிக பட்சமாக 36 சதவிகிதமும், ஐதராபாத் தொகுதியில் மிகக்குறைந்த அளவில் 12.20 சதவிகிதமும் வாக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளது.
காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்:
சிக்கிம் : 1156 வாக்காளர்களில் 182 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் : 22.84 சதவிகிதம்
நாகலாந்து : 41 சதவிகிதம்
மேகாலயா: 27 சதவிகிதம்
அருணாச்சல பிரதேசம் : 27.48 சதவிகிதம்
மிசோரம் : 29.08 சதவிகிதம்
மேற்கு வங்காளம் : 38.08 சதவிகிதம்
மணிப்பூர்: 35.05 சதவிகிதம்
மகாராஷ்டிரா: 13.7 சதவிகிதம்
உத்தரகாண்ட்: 23.78 சதவிகிதம்
லட்சத்தீவு: 23.1 சதவிகிதம்