லக்னோ:

நாடு முழுவதும் இன்று முதல்கட்ட தேர்தல் 91 நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரு கிறது. உ.பி. மாநிலத்திலும் 8 லோக்சபா தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் காவல் துறை யினர்களுக்கு நமோ என்று பெயரிடப்பட்ட உணவு பார்சல்  விநியோகிகப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ந மோ என்றால் நரேந்திர மோடியை குறிப்பதாகும். எனவே நமோ என்ற பெயரில் ஏராளமான திட்டங்களை மோடி அரசு அறிவித்திருக்கும் நிலையில், சமீபத்தில் நமோ டிவியையும் அறிமுகப் படுத்தியது. ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து விட்டது.

இந்த நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு  ”நமோ” பெயர் பொறித்த உணவு பார்சல் வழங்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நொய்டாவில் உள்ள கவுதம்புத் நகர் 15A என்ற வாக்குச்சாவடியில் நமோ  உணவு பார்சல் வழங்கப்பட்டது. நமோ என்ற பெயருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில்,  வாக்காளர்களை பாஜகவுக்கு வாக்களிக்கும் வகையில் மறைமுகமாக அறிவுறுத்தும் விதமாக  நமோ உணவு பார்சல்களை  போலீஸ் அதிகாரிகளே  வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நமோ உணவு பார்சல் அட்டையில் நமோ என்ற பெயர் பாஜகவின் காவி நிறத்திலும், மோடி கும்பிடுவது போன்று உள்ள அவரது  கைகளும் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இது யாருடைய நிறுவனம் என்று விவரம் வெளியாகவில்லை. ஆனால், காவல்துறை யினர், இது ஓட்டலின் பெயர் என்று கூறி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.