சென்னை:
நாடாளுன்ற தேர்தலையொட்டி, தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல்ஆணையம் நியமனம் செய்துள்ளது.
தேர்தல் சமயத்தில் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தற்காலிகமாக இடம் மாற்றப்படு வது வழக்கம். அதுபோல தமிழக டிஜிபி உள்பட முக்கிய காவல்துறை அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடம் மாற்ற வேண்டும் என்று திமுக உள்பட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தன.
இந்த நிலையில், தேர்தல் நடைபெற இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், இன்று திடீரென தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்தது தேர்தல் ஆணையம் நடவடிக்கைஎடுத்து உள்ளது.
தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நீடிக்கும் நிலையில் தேர்தலுக்காக அசுதோஷ் சுக்லா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.