பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர்.
இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திரைப்படம் ரிலீஸாகவும் தருவாயில் இருக்க , இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தேர்தல் முடிந்த பிறகே ‘ஆர்.கே.நகர்’ வெளியாகும்.இது அரசியல் படம் இல்லை என்ற போதிலும், நாங்கள் செய்யாத ஒரு தவறுக்காக சற்றும் எதிர்ப்பார்க்காமல் இந்த பிரச்சனை வந்திருப்பதாக கூறியுள்ளார்.
தல பாணியில் சொல்ல வேண்டும் என்றால், வாழு வாழ விடு என வெங்கட் பிரபு வீடியோவில் கூறியுள்ளார். எனவே, தேர்தல் முடிந்த பிறகு தான் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.