சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்து உள்ளது.

அதன்படி,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 22 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கும் பதியப்பட்டது. விசாரணையை தொடர்ந்த விரைவில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில்,  திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கு மே 19ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  ஏப்ரல் 22ந் தேதி நான்கு தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

ஏப்ரல் 29ந் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்

ஏப்ரல் 30ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை

மே 23ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், மனோகர் பாரிக்கர் மரணத்தினால் காலியாக உள்ள கோவாவின் பனாஜி தொகுதிக்கும் அன்றைய தினம் தேர்தல் நடைபெற உள்ளது.

அதுபோல, கர்நாடக மாநிலத்தில் குன்ட்கோல் (Kundgol) தொகுதியிலும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.