பெங்களூரு: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில், வெறும் 27 பெண்களே போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மாநிலத்தின் 28 தொகுதிகளுக்கு போட்டியிடும் ஆண்களின் எண்ணிக்கை 496 என்றளவில் இருக்கையில், பெண்களின் எண்ணிக்கை வெறும் 27 என்பதாக சுருங்கியுள்ளது.

ஏப்ரல் 18ம் தேதி நடக்கும் முதற்கட்ட தேர்லில், கர்நாடகத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் சூழலில், வெறும் 15 பெண்களே இந்த முதற்கட்ட தேர்தலில் களம் காண்கிறார்கள்.

ஆனால், முதற்கட்ட தேர்தலில் களம் காணும் ஆண்களின் எண்ணிக்கை மொத்தம் 227 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், ஏப்ரல் 23ம் தேதி, மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில் வெறும் 12 பெண்களே களம் காண்கிறார்கள்.

– மதுரை மாயாண்டி