லிபியா:

லிபியாவிலிருந்து தமது படையினரை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது.


லிபியாவில் இஸ்லாமிய அரசுக்கும் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் செயல்பட்டன.

பாதுகாப்பு நிலைமை தற்போது நன்றாக இருப்பதாக கூறி, தமது படைகளை அமெரிக்கா வாபஸ் பெற்றுள்ளது.

எனினும் லிபியாவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என அமெரிக் கப்பற்படை தளபதி தாமஸ் வால்தாவுசர் கூறியுள்ளார்.

எவ்வளவு படைகள் வாபஸ் பெறப்பட்டன, எவ்வளவு படையினர் லிபியாவிலேயே தங்கியிருப்பர் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.