டில்லி:
சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவைகளில் உறுப்பினராக இருப்பவர்கள், தங்களது கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
போலியான செய்திகள், சமூக விரோத பதிவுகளுக்கு செக் வைக்கும் நோக்கில் சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
சமூக வலைதளங்களில், நாளுக்கு நாள் போலியான அதிகாரிகள் அதிகரித்து வருகின்றன. இது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. பலர், பாலியல் சம்பந்தமான மிரட்டலுக் கும் சமூக வலைதளங்களையே பயன்படுத்தி வருகின்றனர். மேலும், முகம் தெரியாதவர்களால் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களும் பதிவிடப்படுகின்றன.
இதுபோன்ற தகவ்லகளை தடுக்க வலியுறுத்தி ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பலமுறை அரசு சார்பில் எச்சரிக்கை விடுத்தும், தற்போதைய இணையதள தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்திருப்பவர்களை, அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆதார், மொபைல் எண் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் சமூக வலைதள கணக்கை பயனர்கள் இணைக்கும் திட்டத்தை அரசு விரைவில் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசின் இந்த திட்டம் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் என்ற எதிர்ப்புகளை சமாளிக்கவும் அரசின் சார்பில் புதிய யுக்திகள் கையாளப்பட்டு வருவதாகவும், விரைவில் இதற்கான அரசாணையை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக பொய் செய்திகள், சமூக விரோத செய்திகளை யார் பதிவேற்றுவது என்பது குறித்து உடனடியாக அறிய முடியும் என்று அரசு நம்புகிறது.
தற்போது பெரும்பாலான அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சமூக வலைதளங்களை யும் தங்களது பிரசார ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சமுக வலைதள கணக்குடன், ஏற்கனவே வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆதாருடன் இணைந்தது போல சமூக வலைதள கணக்குகளையும் அரசு இணைக்க ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாக டில்லி தகவல்கள் கூறுகின்றன.