புதுடெல்லி:

தேசப்பற்று பற்றி புதிய வரையறை கற்பிக்கப்படுவதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.


புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சோனியாகாந்தி பேசியதாவது:

எதிர் கருத்துகளை மோடி அரசு மதிக்க தயாராக இல்லை. மக்கள் மீது ஆட்சியாளர்கள் தாக்குதல் நடத்தும்போது, நம்பிக்கையை இழப்பதோடு, ஆட்சிக்கு எதிராகவும் மாறிவிடுவார்கள்.

நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்காதவர்கள்தான் தேசப் பற்றை பற்றி பேசுகிறார்கள். இன்று நமக்கு புதுவிதமான தேசப் பற்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம் என்ற வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதை கண்காணிப்போம். நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.