பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட சிம்பு இருக்க , அவர் தம்பி குறளரசனுக்கு திருமணம் நடக்கவுள்ளது.
டி.ராஜேந்திரனின் இரண்டாவது மகனும், சிம்புவின் சகோதரருமான குறளரசன் இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவருக்காகத் தான் அண்மையில் இஸ்லாம் மதத்திற்கு குறளரசன் மாறியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், வரும் 26ம் தேதி குறளரசனுக்கு தனது வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் நடக்க இருக்கிறது.
திருமண அழைப்பிதழை அரசியல் , சினிமா , நண்பர்கள் மற்றும் உறனர்களுக்கு டி.ராஜேந்தர் கொடுத்து வருகிறார். அவ்வகையில், நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு தனது மகன் குறளரசனுடன் டி ராஜேந்தர் சென்று அழைப்பிதழை கொடுத்துள்ளார் . இதை விஜயகாந்த் தனது ட்விட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.