சென்னை:
தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடியில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பேசினார்.
தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவது பற்றி அவர் மறைமுகமாகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அவர் பேசிய வீடியோவும் வைரலாகி வந்தது.
இதையடுத்து, அன்புமணி சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் தமிழக தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.