
‘கடவர்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகும் நடிகை அமலா பால். இப்படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கவுள்ளார் அமலா பால்.
இப்படத்தில் அதுல்யா, ஹரீஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்ட பலர் அமலா பாலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமாவால் எழுதப்பட்ட ‘ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது இப்படம் .
Patrikai.com official YouTube Channel