அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ’மார்வெல் அன்தெம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. அதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக படத்தின் இயக்குனர் ஜோ ருஸ்ஸோ இந்தியா வந்தார்.
அப்போது பேசுகையில் அவர் :-
’எந்திரன்’ படத்தின் க்ளைமாக்ஸ்ஸில் பல ரோபோக்கள் சேர்ந்து ஒரு பெரிய ரோபோவாக உருமாறும். அந்த காட்சியை அவரின் ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ படத்தின் இறுதிக் காட்சியில் வில்லனான அல்ட்ரான் ரோபோக்கள் ஒன்று சேர்ந்து ஒரு மெகா சைச் அல்ட்ரானாக மாறுவது போன்று ஒரு காட்சியை படமாக்கியதாகவும் பின்னர் அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் ஜோ ருஸ்ஸோ தெரிவித்தார்.