சென்னை

ரசு தலையிட்டுக்கு பிறகு எல் கே ஜி படிக்க இரண்டாம் முறையாக வசூலித்த கட்டணத்தை அடையார் பள்ளி திரும்ப அளித்தது.

 

அடையாரில் உள்ள பாரத் சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் 4 வயது மாணவி ஒருவர் எல்கேஜி வகுப்பில் ஃபெயில் ஆக்கப்பட்டுள்ளார்.   அரசு ஏற்கனவே எட்டாம் வகுப்புவரை மாணவர்களை ஃபெயில் ஆக்கக் கூடாது என சட்டமியற்றியும் சட்டத்தை மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது.    அந்த மாணவியின் பெற்றோரிடம் அந்தப் பெண்ணை மீண்டும் எல்கேஜியில் படிக்க வைக்க கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களிடம் தாங்களாகவே விரும்பி அந்த மாணவி படிப்பில் முன்னேற மிண்டும் அதே வகுப்பில் சேர்த்து படிக்க வைக்க விரும்புவதாக கடிதம் கேட்டுள்ளது.    கட்டணத்தை செலுத்திய பெற்றோர்கள் இந்த கடித விவகாரத்தால் அதிருப்தி அடைந்ததால் கட்டணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

இந்த செய்தி பல ஊடகங்களிலும் வெளியாகியது.   இதை ஒட்டி கல்வித் துறை அதிகாரி, “குழந்தைகளுக்கு கல்வி கற்கும் உரிமை சட்டம் 2009 இன் படி எந்த மாணவரையும் எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் ஆக்கக் கூடாது என உள்ளது.  இந்த பள்ளி அந்த சட்டத்தை மீறி உள்ளது.  எனவே இது குறித்து அந்த பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று அந்த பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோரை அழைத்து அவர்கள் செலுத்திய கட்டணம் முழுவதையும் காசோலையாக திருப்பிக் கொடுத்து விட்டது,   தற்போது அந்த மாணவியின் பெற்றோர்  திருவான்மியூர் பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு  பள்ளியில் தங்கள் மகளை சேர்க்க உள்ளனர்.