சென்னை

ட்டாம் வகுப்பு வரை குழந்தைகளை ஃபெயில் ஆக்கக் கூடாது என்னும் அரசு உத்தரவை மீறி சென்னை அடையாறில் உள்ள ஒரு பள்ளியில் எல்கேஜி மாணவி ஒருவர் ஃபெயில் ஆக்கப்பட்டுள்ளார்.

திருவான்மியூரை சேர்ந்த ஜெய்சங்கர் என்னும் 36 வயதான மாநகர போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர் தனது 4 வயது மகளை அடையாரில் உள்ள பாரத் சீனியர் செகண்டரி பள்ளியில் கடந்த ஜூன் மாதம் எல்கேஜி வகுப்பில் சேர்த்துள்ளார். இந்த பள்ளியில் அந்த மாணவியின் கல்வித் திறன் குறித்த அறிக்கைகள் அளிக்கப்படவில்லை என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆனால் வாய்மொழியாக மாணவிக்கு எண்களும் எழுத்துக்களும் சரியாக படிக்கத் தெரியவில்லை என கூறி உள்ளனர்.

இந்த வருட முழு அண்டு தேர்வு முடிந்ததும் கடந்த மாதம் 14 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோரை அழைத்துள்ளனர். மாணவியின் தய் ஹேமாவதி என்பவரிடம் மாணவியின் தேர்வு முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த மாணவி அங்கு தொடர்ந்து படிக்க வேண்டும் எனில் மீண்டும் எல் கே ஜி யில் படிக்க வேண்டும் எனவும் அப்படி இல்லை எனில் மாணவிக்கு டி சி அளித்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு பள்ளியில் சேர்த்தால் மீண்டும் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்பதால் அவர் தனது மகள் மீண்டும் எல் கே ஜியில் படிக்க ரூ.15,275 கட்டணம் செலுத்தி உள்ளார். இந்நிலையில் அவர்களாக விருப்பப்பட்டு தனது மகளை மீண்டும் எல் கே ஜி வகுப்பில் சேர்த்துள்ளதாக ஒரு கடிதம் எழுதி கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. பள்ளியின் முதல்வர் ”அந்த மாணவியின் பெற்றோர் அவர்களாகவே விரும்பி தங்கள் மகளின் கல்வித் தரம் உயர மீண்டும் எல் கே ஜி யில் சேர்க்குமாறு வேண்டிக் கொண்டனர். அதை நாங்கள் எழுத்து பூர்வமாக அளிக்கும்படி கேட்டோம்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு ஹேமாவதி, “இது பொய்யான தகவல் ஆகும். எனது மகள் அனைத்து எழுத்துக்களையும் ஒன்று முதல் நூறு வரையிலான எண்களையும் படிக்கிறார். ஆப்படி இருக்க ஒரே வகுப்பில் நான் எதற்கு என் மகளை மீண்டும் படிக்க வைக்க வேண்டும்? இனியும் இந்த பள்ளியில் என் மகல் படிக்க மாட்டார். நான் ஏற்கனவே இந்த வருடத்துக்காக செலுத்திய கட்டணத்தை திருப்பி அளிக்குமாறு மட்டுமே கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலரும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்தவருமான செந்திலாறுமுகம், “சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளை ஃபெயில் ஆக்க்கக் கூடாது என இருக்கையில் இவ்வாறு பல பள்ளிகள் சட்டத்துக்கு புறம்பாக நடந்துக் கொள்கின்றன.. இது போல சிறு குழந்தைகளை ஃபெயில் ஆக்கும் பள்ளி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.