டில்லி:

க்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்

மக்களவைத் தேர்தலையொட்டி,  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து,  பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து, கருத்துகளை கேட்டறிந்தனர்.

பின்னர், பொதுமக்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.  இதற்காக இதற்காக பிரத்யேக வலைதளத்தையும் தொடங்கியது.

இன்று தேர்தல் அறிக்கை வெளியாவதையொட்டி, ஏற்கனவே தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் லட்சக்கணக்கான கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நிதி ஆயோக் கலைக்கப்படும் என்றும் அதற்கு பதிலாக புதிய திட்டக்குழு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.