தூத்துக்குடி:
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று தூத்துக்குடியில் தமிழிசைக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதற்கான மேடை அமைக்கும் பணியை மத்திய சிறப்பு புலனாய்வு துறையினர் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடியில் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக வேட்பாளர் தமிழிசை களமிறக்கப்பட்டு உள்ளார். அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்ற வருகிறது.
அவருக்கு ஆதரவாக தூத்துக்குடியில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்பட பலர் பங்கேற் கின்றனர்.
இதற்காக தூத்துக்குடி- மதுரை புறவழிச் சாலையில் பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை மத்திய சிறப்பு புலனாய்வுத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
[youtube-feed feed=1]