சென்னை:
பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, ஆம்னி பேருந்து நிலையங்களில் உள்ள அங்கீகாரமற்ற இடைத்தர்களை அகற்ற சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் திருவிழாக்காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட கட்டணம் ஏதும் அறிவிக்கப்படாமல், இடைத்தரகர்கள் மூலம் டிக்கெட் கட்டணங்களை ஆம்னி பேருந்து நிர்வாகிகள் வசூலித்து வருகின்றனர்.
இதை கட்டுப்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆம்னி பேருந்து நிலையங்களிலும் அங்கீகாரம் இல்லாத ஏஜெண்ட்டுகள், இடைத்தரகர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.