பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் பறந்து செல்லும் அழகை, இன்டிகோ விமானத்தின் பைலட் கேப்டன் கருன் கரும்பயா தனது மொபைல் மூலம் வீடியோவாக பதிவு செய்து, அதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இன்று காலை 9.27 மணிக்கு இஸ்ரோ பிஎஸ்எல்வி -சி-45 விண்கலத்தை எமிசாட் மற்றும் 28 செயற்கை கோளுடன் வெற்றிகரமான விண்ணில் ஏவியது. அதைத்தொடர்ந்து செயற்கை கோள்கள் அதற்கான பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பறந்த காட்சியை விமானத்தின் பைலட் ஒருவர் வீடியோ எடுத்து டிவிட்டர் சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார்.

அந்த வீடியோவை இன்டிகோ ஏ-320 விமானத்தை இயக்கிய விமானத்தின் பைலட்  கேப்டன் கருன் கரும்பயா தனது மொபைல் மூலம் வீடியோ  எடுத்துள்ளார். சுமார் 224 நாட்டிக்கல் தொலைவில் இருந்து, அதாவது தோராயமாக  250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து, விண்கலம் ஏவுதளத்தில் இருந்து சுமார் 50 நாட்டிக்கல் உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது,   பிஎஸ்எல்வி சி-45 தனது இலக்கை நோக்கி பாய்ந்து செல்லும் காட்சியை பதிவு செய்துள்ளார்.

இதை தனது டிவிட்டர் வலைதளத்திலும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக்  செய்யுங்கள்… 

https://twitter.com/manojchannan/status/1112591288824680448?s=07&fbclid=IwAR04lhxVbv02H3H7UwWAvAE83Vf9naZNZ-mKwTgEAFHHf193i8CxPGI6mdk