பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் கபூரும் ,ஆலியாபட்டும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டதை இருவரும் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
64 -வது பிலிம்பேர்ரில் சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கும் , சிறந்தநடிகைகான விருது ஆலியாபட்டுக்கும் வழங்கப்பட்டது. அப்போது பேசிய ஆலியாபட், ரன்பீர் கபூருக்கு தனது காதலை முதல் முறையாக வெளிப்படையாகத் தெரிவித்தார்.
அப்பொழுது ரன்பீர் கபூர், வெட்கதட்டுடன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு சிரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் ஆலியாபட்டின் தாயார் சோனியா ரஸ்தான் : ஆலியாபட், ரன்பீர் கபூருடன் டேட்டிங் சென்றால் கூட எனக்கு கவலையில்லை அவளின் மகிழ்ச்சி மட்டும் தான் தனக்கு முக்கியமென்று கூறியுள்ளார். மேலும் காதல் விவகாரம் என்பது ஆலியா பட்டின் தனிப்பட்ட விஷயம், அதில் நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.