திரையுலகிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட பாடகி சுசீலா அவர்களுக்கு வயது 84. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன…”, ”தமிழுக்கு அமுதென்று பேர்….” போன்ற 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அவர் பாடிய பாடல்களுக்கான மரியாதை செலுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்மபூசன் விருதை வழங்கியுள்ளது . மேலும் 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார் பாடகி சுசீலா.
இந்நிலையில் பாடகி சுசீலா அவர்களுக்கு லயா மீடியா சார்பாக பாராட்டு விழாவை நடத்த இருக்கிறார் அவரின் ரசிகரான வீரசேகர். ‘சுசீலா 65’ என்ற தலைப்பில் நடைபெற இருக்கும் இந்த பாராட்டு விழா, வரும் மே மாதம் 19-ஆம் தேதியன்று சென்னை பல்கலைகழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜுவிற்கு ஒரு பிரம்மாண்ட விழாவை ஏற்கனவே இவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.