பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடித்து 2016 ல் வெளியான தேவி படத்தின் தொடர்ச்சியாக தேவி 2 வையும் இயக்குகிறார் இயக்குநர் விஜய்.

ஜி.வி.பிலிம்ஸ் சார்பில் ஐசரி கே கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த டீசரில் ஒரு பேய் இல்ல இரண்டு பேய் இருக்கு என கோவை சரளா கூறுவதில் இருந்து இரண்டு பேய்கள் நம்மை மிரள வைக்க காத்திருப்பது போல் தெரிகிறது.