சென்னை: சர்ச்சையில் சிக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.எஸ்.கர்ணன், இந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
“அரசு மற்றும் நீதித்துறையில் நிலவும் லஞ்ச லாவண்யங்களை வெளிக்கொணர்வதே எனது நோக்கம்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் ‘ஊழல் எதிர்ப்பு ஆற்றல் கட்சி’ என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து, அவரின் கட்சி 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து உறுதியற்ற தகவல்கள் வெளிவந்தன.
இந்திய வரலாற்றிலேயே, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக, தனது பதவி காலத்தில் சிறை தண்டனைப் பெற்ற ஒரே உயர்நீதிமன்ற நீதிபதி என்ற வரலாறு இவருக்குண்டு. இவர் சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.
தனது 6 மாதகால சிறைதண்டனையை நிறைவுசெய்துவிட்டு, கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார் என்பது நினைவுகூறத்தக்கது.
– மதுரை மாயாண்டி