காரைக்குடி:

னக்கு சீட் வழங்கப்படுவதை ப.சிதம்பரம் தடுத்து விட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டிய சுதர்சன நாச்சியப்பனை, இன்று சிவகங்கை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் சந்தித்து பேசினார். இதில் சுதர்சன நாச்சியப்பன் சமாதானமாகியுள்ள நிலையில், இருவரும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்காக உழைப்போம் என்று தெரிவித்து உள்ளனர்.

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட சிதம்பரம் குடும்பத்தினர் மட்டுமின்றி, சுதர்சன நாச்சியப்பன் உள்பட பலர் விருப்பமனு அளித்திருந்தனர். இதன் காரணமாக வேட்பாளர் அறிவிப்பில் இழபறி நீடித்தது.  கடைசியாக கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  சுதர்சன நாச்சியப்பன் கார்த்தி சிதம்பரம் தேர்வை கடுமையாக விமர்சித்தார்.

ப.சிதம்பரம் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் சிவகங்கை தொகுதி மக்கள் வெறுப்பில் உள்ளனர். குடும்பமே பெயிலில் உள்ள நிலையில், சிதம்பரம் தனது மகனுக்காக சீட் வாங்கியதை ஒரு விபத்தாக தான் பார்க்கிறேன். தொகுதிக்கு எதையும் ப.சிதம்பரம்,  ப.சி.யை பொறுத்தவரை அவர் மக்கள் விரோத சக்தி என்றும், கட்சியை அழிபதற்கான நடவடிக்கைகளில் ப.சிதம்பரம் ஈடுபட்டு வருகிறார், கார்த்தி சிதம்பரம் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இப்படிபட்டவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது என விமர்சனங்கள் வரும். அது காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்து என்று பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று காரைகுடியில் சுதர்சன நாச்சியப்பனை  சிவகங்கை காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் சந்தித்து சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.  இருவரும் சுமார் 20 நிமிடம்  பேசியதாகவும், இந்த சந்திப்பு இனிமையான சந்திப்பாக இருந்தாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இருவரும்,  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக்கு ஆதரவு அளிப்பதாக சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு இருவரும் சேர்ந்து உழைப்போம். காங்கிரஸ் வெற்றிபெறுவதே எங்களுக்கு முக்கியம் என்று சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.