சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுவான சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையத் துக்கு உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை உடனடியாக வேட்பு மனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், வேட்புமனு தாக்கல் செய்வதில் டிடிவி அணி வேட்பாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
நடைபெற உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் டிடிவியின் அமமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை அமமுக வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாமல் இருந்து வந்தனர். த
இதற்கிடையில், தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இதுவரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத நிலையில், சுயேச்சை சின்னமே வழங்க முடியும் என்றும் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.
இதையடுத்து, டிடிவி அணியினருக்கு, பொதுவான சின்னத்தை ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கு மாறு உச்சநீதி மன்றம் இன்று காலை தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியது.
இந்த நிலையில், அமமுக கட்சி வேட்பாளர்களை உடனடியாக வேட்புமனு தாக்கல் செய்யுமாறு டிடிவி தினகரன் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 59 வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.