சென்னை:
சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கூறினார்.
ஸ்டாலின் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் மக்களிடத்தில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறியவர், திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் இன்னும் தங்களது பிரசாரங்களை முன்னெடுக்கவில்லை. அதுபோல சிவகங்கை தொகுதிக்கு சீட் கேட்டு ப.சிதம்பரம் குடும்பத்தினர் உள்பட பலர் முட்டிக்கொண்டிருப்பதால், இன்றுவரை வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவதில் இழபறி நீடித்து உள்ளது.
இந்த நிலையில், இன்று சிவகங்கை வேட்பாளர் யார் என்பது வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.