சென்னை :
தமிழ் சினிமா நடிகர்களை ஆட்டுவித்து வந்த பிரபல நடன இயக்குனர் கலா, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவின் பிரபல பெண் நடன இயக்குநர் கலா. இவர் கடந்த பல ஆண்டுகளாக கலைஞர் டிவியில் மானாட, மயிலாட என்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். சமீப காலமாக ஜெயா டிவியில் பங்கேற்று நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று திடீரென டிடிவியை சந்தித்த கலா தன்னை அமமுகவில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
பின்னர் செய்தியார்களிடம் பேசும்போது, தலைவர் என்றால் அவர் நம் மனத்திற்குப் பிடித்தவராக இருக்க வேண்டும். அந்த வகையில் டிடிவி தினகரன் எனக்கு பிடித்த தலைவர். அவரது செயல்பாடு களும், அதில் வெளிப்படும் நேர்மைத்தனமையும் என்னைக் கவர்ந்து விட்டது என்று கூறினார்.
நான் 30 வருடங்களாக திரைத்துறையில் இருந்தவள். என்னிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதைத் திறம்படச் செய்வேன்.
இவ்வாறு கூறினார்.