டில்லி:

க்களவைத் தேர்தலையொட்டி ஏற்கனவே  6-கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் காட்சி,  நேற்று இரவு 7வது கட்டமாக ஆந்திர மாநிலத்திற்கான  3 லோக் சபா மற்றும் 45 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு ஏற்கனவே  சில பாராளுமன்ற  சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டு உள்ளது.

இந்த நிலையில், நேற்று மீதமிருந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது.  அதன்படி விசாகப்பட்டினம் தொகுதிக்கு, ரமணகுமாரி பெடாடா, விஜயவாடாவுக்கு நரஹரசேதி நரசிம்மராவ், நந்தியால் தொகுதிக்கு லட்சுமி நரசிம்ஹா யாதவ் உள்பட 45 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்  பட்டியிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஆந்திர சட்டமன்ற தேர்தலுக்காக 132 வேட்பாளர்களை கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இவர்களில் 4 பேர் மாற்றப்பட்டு வேறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் 25 லோக்சபா தொகுதிகளும், 175 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு தேர்தல்களும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11ந்தேதி நடைபெறுகிறது.

இதுவரை காங்கிரஸ் கட்சி 149 லோக்சபா வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணியுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.