னாஜி

ன்று மாலை 5 மணிக்கு மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

 

மனோகர் பாரிக்கர் மோடி பாதுகாப்பு அமைச்சராக பணி புரிந்துள்ளார்.  சர்ஜிகல் ஸ்டிரைக், ரஃபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட பல ராணுவ நடவடிக்கைகள் இவருடைய பதவிக்காலத்தில் நடைபெற்றது.   தனது பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நான்காம் முறையாக கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றார்.

இவருக்கு கணைய அழற்சி நோய் ஏற்பட்டு சிகிச்சை  பெற்றார்.  பிறகு அது புற்று நோய் என கண்டறியப்பட்டது.    அவர் கோவா, மும்பை, நியூயார்க் மற்றும் டில்லியில் சிகிச்சை பெற்றார்.   ஆயினும் அவர் உடல்நிலை சீரடையவில்லை.  கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை பாரிக்கர் மரணம் அடைந்தார்.

இவருடைய இறுதிச் சடங்கு முழு ராணுவ மரியாதையுடன் கோவாவில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.   கோவாவின் முதல் முதல்வர் தயானந்த் பண்டோத்கர் உடல் தகனம் பெற்ற இடத்தின் அருகே அதே மிராமர் கடற்கரையில் மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

மனோகர் பாரிக்கர் மறைவை ஒட்டி மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.