சென்னை:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேனியைச் சேர்ந்த மாதேஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.


ஹாங்காங்கில் 3-வது இளைஞர் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட தேனியை சேர்ந்த மாதேஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இவரது தந்தை விவசாயி ஆவார்.
ஜப்பானைச் சேர்ந்த ஆலன் டாட்ஸ்சுனாமி கிளே, மாதேஸைவிட ஒரு வினாடி முன்னதாக ஓடி தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீரர் சுமீத் காரப் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

தங்கத்தை தவறவிட்டதால் கவலைப்பட வில்லை என்று கூறிய மாதேஸ், இதைவிட குறைவான நேரத்தில் இலக்கை கடக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார்.