சென்னை
திமுக கூட்டணியில் பெரம்பலூர் வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி சார்பாக பாரிவேந்தர் போட்டி இடுகிறார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி இடம் பெற்றுள்ளது அந்த கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இந்த கட்சியை எதிர்த்து அதிமுக போட்டி இடுகிறது.
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டி இடுகிறார். இந்த தகவலை அந்த கட்சியின் தலமை அலுவலகம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மகக்ளவை தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தரை ஆதரித்து வரும் 20 ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரசரம் செய்ய உள்ளார்.
Patrikai.com official YouTube Channel