சென்னை:

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார்.

கடந்த 13ந்தேதி தமிழகம் வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சென்னை  ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது தமிழக அரசையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து ராகுல் பேசினார்.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால்,  ராகுல் காந்தி பங்கேற்றது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தில்  பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

\

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ராகுல் நிகழ்ச்சி குறித்த  விசாரணை நடத்த மாவட்ட தேர்தல்  அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டு இருப்ப தாகவும்,  தேர்தல் அதிகாரியின் அறிக்கைக்கு பிறகு  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.