காஞ்சிபரம்:
சிலை மோடி தொடர்பாக முன்னாள் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இன்று கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம், ஏகாம்பர நாதர் கோயிலில் சிலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் மோசடி செய்ததாக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி இன்று காலை அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த சிலை கடத்தல் மற்றும் சிலைகள் மாற்றப் ட்டது தொடர் பான புகார்களை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறை யினர் குழு விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, சிலை கடத்தல் விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இந்து அறநிலையத் துறையை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக முன்னாள் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு சிறை சென்றார். தற்போது ஜாமினில் உள்ளார்.
இந்த நிலையில், ஏகாம்பர நாதர் கோயிலில் சிலை செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து, சென்னை ஐஐடி நிபுணர் குழு நடத்திய ஆய்வில் 111 கிலோ எடை கொண்ட சோமாஸ்கந்தர் சிலையில் எள்ளளவு தங்கம் கூட இல்லை என்பது தெரியவந்தது. ஏலவார் குழலி சிலையிலும் முறைகேடு நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, சிலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் மோசடி செய்ததாக அப்போதைய அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சிலை வடிவமைப்பதற்கான ஆணையில் அப்போது அறநிலையத்துறை ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வீரசண்முக மணி கையெழுத்திட்டு இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு, கிண்டியில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அ விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நாளை அவர் கும்பகோணத்தில் உள்ள சிலைக்கடத்தல் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சிலை கடத்தல் தொடர்பான புகார்களை விசாரித்து வரும் பொன் மாணிக்கவேல் தலைமையில் உள்ள சிறப்புப் பிரிவினர் இவரை கைது செய்திருக்கிறார்கள். இன்னும் சிலரும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.