டில்லி

தியோப்பியா விமான விபத்தில் மரணம் அடைந்த 4 இந்தியர்களுக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

நேற்று எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து நைரொபி நோக்கி சென்ற விமானம் கிளம்பிய ஆறாம் நிமிடம் விபத்துக்குள்ளானது.    இந்த விமானத்தில் பயணம் செய்த 149 பயணிகள் மற்றும் 8 விமானக் குழுவினர் அனைவரும் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்த 149 பயணிகள் உலகில் உள்ள 33 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.    இவர்களில் நால்வர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என பயணிகள் பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.    இது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இந்த விமான விபத்து குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்டரில், “நான் எதியோப்பியன் ஏர்லைன்ஸின் ஈடி 302 விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்.   இந்த விமான விபத்தில் நமது இந்திய நாட்டினர் நால்வரை நாம் இழந்துள்ளோம்.

நான் எதியோப்பியாவில் உள்ள இந்திய தூதருக்கு மரணமடைந்தோர் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கெட்டுக் கொள்கிறேன்” என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]