காந்திநகர்: இந்தியாவின் 47% பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐஐடி – காந்திநகர் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. அவற்றில் 16% பகுதிகள் மோசமான நிலையில் உள்ளன.

இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள இதர அதிர்ச்சிகரமான அம்சங்கள் யாதெனில், தற்போது நிலவும் வறட்சியால், தண்ணீர் பற்றாக்குறை பெருமளவில் அதிகரிக்கும்.

இந்த ஆண்டு அருணாச்சலப் பிரதேசம் போதுமான மழையைப் பெறவில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகள், தெற்கு ஆந்திரா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகள், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த மழைகாலம் தொடங்குவதற்கு முன்னதாக, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் கடும் வெப்பம் நிலவினால், நிலைமை மிகவும் சிக்கலாகும். ஏற்கனவே பிரச்சினையில் இருக்கும் நிலத்தடி நீரின் அளவு, இந்த வறட்சியால் மேலும் சிக்கலுக்கு உள்ளாகும்.

நிலத்தடி நீரைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், வறட்சியும் சேர்ந்து, நம்மிடமிருந்து தண்ணீரை இன்னும் அதிகமாக பறித்துக் கொள்கின்றன.

இந்த வறட்சி, நாட்டின் பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி