வார்ஸா: 148 அடி ஆழம் கொண்ட உலகின் மிக ஆழமான நீச்சல் குளம், போலந்து நாட்டின் செக்ஸோனோ என்ற இடத்தில் விரைவில் திறக்கப்படவுள்ளது.
இதுவரை உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் என பெயரெடுத்திருந்த, இத்தாலியின் y-40 டீப் ஜாய் நீச்சல் குளத்திடமிருந்து, அந்தப் பெருமையை தட்டிப் பறிக்கவுள்ளது.
ஆனால் பாவம், அந்தப் பெருமையை அந்நீச்சல் குளம் வெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே தக்க வைத்திருக்கும் என்பது போலந்து நாட்டவருக்கு மிகவும சோகமான விஷயமே.
ஏனெனில், இங்கிலாந்து நாட்டின் கோல்செஸ்டர் என்ற இடத்தில், 164 அடி ஆழம் கொண்ட நீச்சல் குளம் தற்போது கட்டப்பட்டு வருகிறது.
செக்ஸோனோ நீச்சல் குளத்தில் இருக்கும் நீரைக்கொண்டு, 27 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பி விடலாம். இந்த நீச்சல்குளம் ஸ்கூபா டைவிங் செய்வோருக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் திறந்துவிடப்படும். இதில் நீருக்கடியிலான ஒரு சுரங்கப்பாதையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, மாநாட்டு அறைகள் மற்றும் ரெஸ்டாரண்டுகளும் இந்த நீச்சல் குளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தக் குளத்தை நிரப்ப, 8000 கியூபிக் மீட்டர்கள் அளவுக்கான நீர் தேவைப்படும்.
– மதுரை மாயாண்டி