போபால்: ஆட்சிக்கு வந்த வெறும் 76 நாட்களில் 83 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்று மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
பல்வேறான கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் சுருக்கம் வருமாறு: நாங்கள் ஆட்சியில் அமர்ந்து வெறும் 76 நாட்கள்தான் ஆகிறது. எனவே, சட்டம்-ஒழுங்கைப் பற்றி முழுமையாகப் பேசுவதற்கு இது சரியான நேரமல்ல.
பாரதீய ஜனதா ஆட்சியிலிருந்த கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு என்பதே இல்லாமலிருந்த நிலையில், அதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சிறிது காலஅவகாசம் தேவை.
மாநிலத்தின் நிதிநிலைமை மிகவும் பரிதாபகரமான சூழலில் இருந்தது. அதை நாங்கள் சீரமைக்க வேண்டியுள்ளது. மேலும், மத்திய அரசு கொடுத்துவந்த ரூ.2000 கோடியையும் இப்போது நிறுத்திவிட்டது.
இப்படியான பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நாங்கள் எங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என்று பதிலளித்தார்.
– மதுரை மாயாண்டி