புதுடெல்லி:
வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலில் இளைஞர்களின் பங்கு குறைந்து வருவதாக, இந்திய நிதி கண்காணிப்பகத்தின் மூத்த பொருளாதார நிபுணர் ஜான் ப்ளூட்ரான் கூறியுள்ளார்.
ப்ரூக்கில் இந்தியா ஏற்பாடு செய்திருந்த வளர்ந்து வரும் பொருளாதார சூழல் குறித்துப் பேசிய ஜான் ப்ளூட்ரான், “பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு 30 சதவீதம் மட்டுமே உள்ளது. இது போதாது.
பள்ளியில் படிக்கும்போதோ, வேலையில் இருக்கும்போதோ இளைஞர்களை பொருளதார வளர்ச்சியில் பங்கெடுக்க வைக்க வேண்டும்.
தலைமுறை இடைவெளி, தொழில்நுட்ப மாற்றம், தரமற்ற வேலைவாய்ப்பு ஆகியவை பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கெடுப்புக்கு தடையாக இருக்கும் காரணிகளாகும்.
இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் கடந்த 2019 பிப்ரவரியில் 7.2% அதிகரித்துள்ளதாக மும்பையில் உள்ள சிஎம்ஐஇ அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
என்எஸ்எஸ்ஓ வரைவு அறிக்கையில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 2017-ல் வேலையில்லா திண்டாட்டம் 6.1% உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.