சென்னை:
அதிமுக பாஜக கூட்டணியில், தேமுதிக, தமாகா இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கட்சிகளும் இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதன் காரணமாக, வண்ணடலூர் கிளாம்பாக்கத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஒட்டப்பட்ட கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களில், விஜயகாந்த் படமும், வாசனின் படமும் மீண்டும் அகற்றப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள அதிமுக அணியில் தேமுதிக இணையும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், தேமுதிகவின் நிபந்தனைகளை ஏற்க அதிமுக தலைமை மறுத்துவிட்ட நிலையில், கூட்டணி இழுபறி நீடித்து வந்தது.
கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர்களிடம் அதிமுக பாஜக தலைவர்கள் பல முறை பேசிய நிலையில், தேமுதிக அதிமுக பாஜக கூட்டணியில் சேரும் என எதிர்பார்ப்பு நிலவியது. இதன் காரணமாக, நேற்று இரவு இன்று நடைபெறும் கிளம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் வைக்கப் பட்டிருந்த தேமுதிக பேனர்கள், கொடிகள் அகற்றப்பபட்டன
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தேமுதிக அதிமுக கூட்டணி உறுதியாகு என எதிர்பார்க்கப் பட்டது. அதன் காரணமாக மதியம் சுமார் 1 மணி அளவில், விஜயகாந்த் மற்றும் வாசன் படங்கள், மோடி பேசும் மேடையிய்ல உள்ள பேனரில் ஒட்டப்பட்டன. இதன் காரணமாக அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக, த.மா.க இணைவது உறுதி செய்யப்பட்டது.
ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தேமுதிக தரப்பில் இருந்து திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திமுக கூட்டணி நேற்றே இறுதி செய்யப்பட்டு விட்டதாக அதன் தலைவர் ஸ்டாலின் அறிவித்து விட்ட நிலையில், திமுகவும் தேமுதிகவை கைவிட்டது.
இந்த நிலையில், மேடையில் ஒட்டப்பட்ட விஜயகாந்த், வாசன் படங்கள் மீண்டும் அகற்றப்பட்டது. இதன் காரணமாக தேமுதிக அதிமுக கூட்டணியில் சேருவதில் மேலும் இழுபறி நீடித்து வருகிறது.