டில்லி:
பாரதியஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் நேற்ற முதல் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை இணையதளத்தை மீட்டெடுக்க முடியாத நிலையில், பாஜக இணையதளத்தை நாங்கள் எழுப்பி விடவா? காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு நக்கலடித்து உள்ளது.
இணையதளத்தை மீட்டெடுக்க உதவி செய்யவா என பாஜகவுக்கு நேசக்கரம் நீட்டி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிசியாக செயல்பட்டு வந்த பாரதியஜனதா இணைய தளம், நேற்று முதல் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு உள்ளது.
சுமார் 24 மணி நேரம்கடந்தும், இதுவரை மீட்கப் படாத நிலை நீடித்து வருகிறது.
இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர் சிக்கப்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சி செய்து வரும் ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது…அதை மீட்கக்கூட பாஜகவின ரால் முடியவில்லை என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தில் துவண்டு கிடக்கும் பாஜக ஐடி பிரிவினருக்கு, காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு உதவ முன் வந்துள்ளது.
உங்களுக்கு உதவி தேவையானால், இணைய தளத்தை எழுப்பி விட தயாராக இருக்கிறோம், அதை சந்தோஷமாக செய்வோம் என்று டிவிட் போட்டுள்ளது.
ஏற்கனவே தோல்வி பயத்தில், செய்வதறியாது விழி பிதுங்கி உள்ள பாஜகவினர், காங்கிரஸ் கட்சியின் நக்கல் காரணமாக மேலும் சோர்வடைந்து உள்ளனர்.\