டாக்கா:

பங்களாதேஷில் விமானத்தைக் கடத்த முயன்றவர், நடிகையை விவாகரத்து செய்து மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.


கடந்த 24-ம் தேதி பங்களாதேஷிலிருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தை முகமது பொலாஷ் அகமது என்பவர் கட்ட முயன்றார்.
இதில் பாதுகாப்புப் படையினரால் முகமது பொலாஷ் அகமது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது குறித்து பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் அசதுசாமான் கான் கூறும்போது, “அகமது ஏற்கெனவே கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
விரைந்து நடவடிக்கை எடுத்த பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டுகள்.

இவருக்கும் பங்களாதேஷ் நடிகை ஷிம்ளாவுக்கும் திருமணம் நடந்து பின்னர் விவாகாரத்தாகியிருக்கிறது.ஷிம்ளா தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவரது உடலை வாங்க தந்தையும் மற்ற உறவினர்களும் மறுத்துவிட்டனர்” என்றார்.