ஸ்லாமாபாத்

ந்திய விமானப்படை தாக்குதலால் பாஜவுக்கு 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்தற்கு இம்ரான்கான் கட்சியினர் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா பாலகோட்டில் நடந்த இந்திய விமானப் படை தாக்குதலால் பாஜகவுக்கு 22 தொகுதிகளுக்கு மேல் கர்நாடக மாநிலத்தில் வெற்றி கிடைக்கும் என பேசினார்.   அவர் இவ்வாறு பேசியது பாஜகவினருக்கு மட்டுமின்றி இந்திய நாட்டுக்கே மிகவும் தொல்லை தருவதாக அமைந்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெகரீக் ஈ இன்சாஃப் கட்சியினர் எடியூரப்பாவின் பேச்சுக்காக இந்திய நாட்டின் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   இந்தியர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போரை தூண்டுவதாக அக்கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.   இதற்கு முன்னணி பத்திரிகையாளர் பர்கா தத் அளித்த டிவிட்டர் செய்தியையும் அக்கட்சி சுட்டிக் காட்டி உள்ளது.

பர்கா தத் தனது டிவிட்டரில், “பாஜக தலைவர் எடியூரப்பா பாலாகோட் இந்திய விமானப்படை தாக்குதலால் பாஜகவுக்கு 22 இடங்களில் வெற்றி கிடைக்கும் என குறிப்பிட்டது தவறானது.  இந்த பேச்சு விங் கமாண்டர் அபிநந்தன் மற்றும் புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களை அவமானப் படுத்துவதாகும்” என பதிந்துள்ளார்.

இதற்கு அரை மணி நேரம் கழித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அடுத்த டிவிட்டர் பதிவில், “விமானப்படை தாக்குதல், போர் அபாயம், வீரர்களின் தியாகம் மற்றும் ஏராளமான பொதுமக்களுக்கான அபாயம் ஆகியவை இந்திய ஆளும் கட்சியின் பிரதிநிதிக்கு 22 தொகுதிகளின் வெற்றியாக தெரிகிறது.   இது போரா அல்லது தேர்தலின் தேர்வா?” என பதிந்துள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில நாளேடான தி குவிண்ட் தெரிவித்துள்ளதாவது :

இந்த டிவீட்டுகள் மூலம் இம்ரான் கானின் கட்சியினர் இருவிதத்தில் இந்தியாவுக்கு தொல்லை அளித்துள்ளனர்.

முதலாவதாக இந்திய அரடுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு வித பிரிவை உண்டாக்கி தனி மனிதரான மோடியின் வெற்றிக்காக பாகிஸ்தானை குறி கூறுவதாக நம்ப வைப்பது.

இரண்டாவதாக புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை தாக்கியது என்னும் உண்மையை உலகுக்கு மறைத்து தேர்தல் உத்திக்காக இந்த தாக்குதலை நடத்தியதாக அனைவரையும் சிந்திக்க வைத்து புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தின் தொடர்பை மறக்க வைப்பது.