டில்லி:

ந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் இன்று மாலை 5 மணிக்கு முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கர வாதிகளின் முகாம்களை வேரறுத்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத் திடம் சிக்கி உள்ளார்.

முப்படை தளபதிகள்

இந்த பரபரப்பான சூழலில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும், முப்படை தளபதிகள், உளவுத்துறை தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு  ராணுவம் விமானப்படை, கப்பல் படை  அதிகாரிகள் செய்தியாளர்களை  சந்திப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது

பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் முப்படை பாதுகாப்பினரும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, எல்லை நிலவரங்கள், விமானி அபிநந்தனை மீட்பது உள்ளிட்டவை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படலாம் எனப்படுகிறது.

இந்த செய்தியாளர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட மாட்டாது என தகவல் வெளியாகி யுள்ளது. அதேபோல், செய்தியாளர் சந்திப்பின் போது மொபைல் போன்களுக்கும் அனுமதி யில்லை என்று கூறப்படுகிறது.