திருக்கழுக்குன்றம்:

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டினம் வயலூர் பாலாற்றில்  ரூ.32.50  கோடி செலவில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வயலூர் பகுதியில் பாயும் பாலாற்றில் தடுப்பணை அமைக்கக் கோரி அந்த பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், விவசாயி கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து, பாலாற்றில் தடுப்பணை கட்டப்படும் என அரசு அறிவித்தது. இதறக்ன ஏற்பாடுகளை கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையப் பங்களிப்பின் மூலம் ரூ.32.50 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பணை கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்,  தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர். ‘

அவர்களுடன்  மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அருண்குமார், கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குநர் ஸ்ரீநிவாஸ், நிர்வாக அதிகாரி சுரேஷ், தலைமைப் பொறியாளர் மனோகரன், மாவட்ட வருவாய் அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் ஸ்ரீதர், அதிமுக மாவட்டச் செயலர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

to

ரூ.32 கோடி செலவில் பாலாற்றில் தடுப்பணை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்