புதுடெல்லி:

கடமையாற்றும் பாதுகாப்புப் படையினர் கும்பலால் தாக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு மனித உரிமைக்குட்பட்டு பாதுகாப்பு தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


19 வயது ப்ரீத்தி கேதார் கோகலே மற்றும் 20 வயது காஜல் மிஸ்ரா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், “ஜம்மு காஷ்மீரில் கும்பல் ஒன்று பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்கியதையும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதையும் கண்டு துயருற்றோம்.

கடமையில் இருக்கும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துவது மனித உரிமை மீறல் என்ற வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், இது குறித்து பதில் அளிக்குமாறு பாதுகாப்புத் துறை, ஜம்மு காஷ்மீர் மாநில மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.